மாநகராட்சி ஆணையருக்கு பரபரப்பு கடிதம்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை அகற்றக்கோரி நான் மாரியம்மன் பேசுகின்றேன் என மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-02-29 02:49 GMT
திருநெல்வேலி மாநகராட்சி 38வது வார்டில் உள்ள பீர்க்கன் குளத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு எனது பெயரில் கட்டப்பட்ட கோவிலை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு நான் மாரியம்மன் பேசுகின்றேன் என்ற கடிதம் மூலம் நேற்று (பிப்27) கோரிக்கை வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.