களப்பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
ஆலவயல் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-27 06:48 GMT
ஆலவயல் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர். பெண் விவசாயி ஜெயலெட்சுமி நாற்றங்கால் பயிரிடுவதை மாணவிகள் பார்வையிட்டனர். அவரது நாற்றங்காலில் உளுந்துக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் கத்திரிக்கு தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவதையும், ஆலவயல், சிம்ரன்,மணப்பாறை, போன்ற கத்திரி ரகங்களை பயிரிட்டு, விதைப் பிரித்தெடுத்தல் முறையை பயன்படுத்தி நாற்றுகளையும் விற்பனை செய்து வருவதையும் மாணவிகள் கேட்டறிந்து பார்வையிட்டனர்.