தென்னை நாற்றுகள் உற்பத்தி குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளம் அண்ணா நாற்றங்காலில், தென்னை நாற்றுகள் உற்பத்தி குறித்து பயிற்சி பெற்றனர்
Update: 2024-04-08 06:24 GMT
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் 10 பேர், கிராம தங்கல் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அண்ணா நாற்றங்காலில், தென்னை நாற்றுகள் உற்பத்தி குறித்து பயிற்சி பெற்றனர். அங்கு பணிபுரியும் ராஜராஜேஸ்வரியிடம் நாற்றங்காலின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் தென்னையில் நெட்டை ரகங்கள், நெட்டை × குட்டை ரகங்கள், அவற்றின் விலை நிலவரம், நாற்றங்கால் மேலாண்மை, நாற்றங்காலுக்கு பயன்படுத்தப்படும் மண் கலவை, உரம் ஆகியவற்றின் அளவு மற்றும் தரமான நாற்றுகளை தேர்வு செய்யும் முறை குறித்து கற்றறிந்தனர். மேலும் பாலிதீன் பைகளின் மூலமாக நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறை குறித்தும் பயிற்சி பெற்றனர்.