மண்வளத்தை பாதுகாக்க வேளாண்துறை வலியுறுத்தல்

உலக மண் தின விழா வேளாண்துறை அலுவலகத்தில் நடைபெற்றது

Update: 2023-12-11 01:53 GMT

மண்வளத்தை பாதுகாக்கவேளாண்துறை வலியுறுத்தல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரிமளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் வலையம்பட்டியில் உலக மண் வள தின விழா நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனத் திட்டம்) முகமது ரபி, செயற்கை உரங்களை அதி கமாக இடுவதால் மண்வளம் பாதிக்கப்படுவது குறித்தும், இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாப்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உழவன் செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து தங்களுக்கு தேவையான இடு பொருட்களை முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை அலுவலர் ரங்கசாமி, தமிழ் மண்வள இணையதளத்தின் மூலமாக மண் வள அட்டைகளை பதிவிறக்கம் செய்து தங்களது நிலத்தில் பயிர் சாகுபடிக்கான உரப்பரிந் துரைகளை பயன்படுத்தலாம் என்று கேட்டுக் கொண்டார். உதவி வேளாண்மை அலுவலர் டயானா ஜெனிபர் வரவேற்றார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜகோபால் மற்றும் கடையக்குடி, வலையம்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் பாண்டி நன்றி கூறினார்.
Tags:    

Similar News