எலச்சிபாளையத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம்
எலச்சிபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 13:21 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
எலச்சிபாளையத்தில் நடந்த தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய குழுகூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பூமாலை நடந்து முடிந்த வேலைகள் சம்மந்தமாக பேசினார்.
இதில், மாநில அரசு விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்துதர வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 100நாள் முழுமையாக பணிவழங்க வேண்டும். வார சம்பளம் முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 2024 ஜன.23ல் மாநிலம் தழுவிய அளவில் நடக்கும் ஆர்பாட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடத்துவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.