விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், சொக்கலிங்கபுரத்தில் பொது சுடுகாட்டு இடத்தில் தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-01-12 06:43 GMT

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விராலிமலை , மாத்துார் ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் பொது சுடுகாட்டு இடத்தில் தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய பொறுப்பாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் கலைச்செல்வி தர்மராஜ் தொடக்க உரையாற்றினார். விவசாய தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் அண்ணா நகர், சிதம்பரம் மேற்கு பகுதி, கே.கே.நகர், விவேகானந்தா நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிடில் வரும் 22ம் தேதி இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டமும்,30ம் தேதி மாத்தூர் அண்ணாநகர் கடைவீதியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News