விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலையை உடனே தொடங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-07-02 03:09 GMT

 திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலையை உடனே தொடங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலையை உடனே தொடங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன்,ஒன்றிய தலைவர் வரதராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி,கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.இதில் வேலை இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக தொடங்க வேண்டும்,100 நாள் வேலையை 200 நாள் நாட்களாக உயர்த்தி ஊதியத்தை ரூ.600 வழங்க வேண்டும்,திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் உடனடியாக 100 நாள் வேலையை தொடங்க வேண்டும், நீர்நிலை புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் அல்லது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News