அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் இன்று எம்எல்ஏ அறிக்கை
பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கன்னியாகுமரி அதிமுக வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த அதிமுக வழக்கறிஞர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து குமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் சுந்தரம் தலைமை வகிக்கிறார். நாகர்கோவில் தெற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன் வரவேற்றார்.
வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருள் பிரகாஷ் சிங், பகுதி செயலாளர் ஜெயகோபால் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் .சுந்தரம் எம் எல் ஏ சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.