பட்டணம் பேரூராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
அதிமுக சார்பில் பட்டணம் பேரூராட்சியில் பூத் கமிட்டி கூட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-11-26 12:45 GMT
அதிமுக சார்பில் பட்டணம் பேரூராட்சியில் பூத் கமிட்டி கூட்டம்
ராசிபுரம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய கழகம் சார்பில் ஆா்.பட்டணம் பேரூர் கழகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் கே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன் தலைமை தாங்கினார். இதில் பேரூர் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழகத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அனைத்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் சரியான முறையில் உள்ளதா என ஒன்றிய கழக செயலாளர்கள் வேம்பு சேகரன், இ.கே.பொன்னுசாமி, தாமோதரன் ஆகியோர் சரிபார்த்து பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஆர்.பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், ஒன்றிய துணைச் செயலாளர். சின்னப்பையன் என்கின்ற முத்துசாமி ஆர்.பட்டணம் பேரூர் துணைச் செயலாளர் எஸ்.பழனிவேல், பேரூர் பொறுப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைத்து சார்பு மன்ற பொறுப்பாளர்களும், கழக முன்னோடிகளும் என பலர் கலந்து கொண்டனர்.