ஓசூரில் அதிமுக பிரச்சாரம்
ஓசூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்தார்.
மூன்றாண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு பாரமான ஆட்சி : தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேச்சு* ஓசூர் தொகுதிக்குட்பட்ட சிதனப்பள்ளி ஜூஜூவாடி மூக்கண்டப்பள்ளி பேகே பள்ளி பேட்டரபள்ளி மத்திகிரி முத்தாலி முகலப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு ஆதரவாக முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் கழக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, ஐந்து ஆண்டுகளில் நாம் ஏமாந்து விட்டோம், இந்த தொகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை, அதேபோல இந்த மூன்றாண்டு கால ஆட்சி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை, இருந்தாலும் மக்களுக்கு பாரமான ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஓசூரை மாநகராட்சியாக உருவாக்கியது நமது அம்மா ஆட்சியில் தான், இந்த மாநகராட்சியில் பொதுமக்களுக்கு நமது அரசுநமது அரசுநல்ல குடிநீர், சுத்தம் ஆகியவற்றை கொடுத்தது ஆனால் இன்று ஓசூர் குப்பை நகரமாகவும் குடிநீர் இல்லாத நகரமாகவும் அதே போல வரி சுமையை மக்கள் மீது திணித்து பாரமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
இதனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இதுதான் நல்ல நேரம் இந்த தேர்தலில் நமது வேட்பாளர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக்கு வந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் சிறப்பான ஆட்சியை அவர் ஏற்கனவே தமிழகத்தில் நான்கரை ஆண்டுகள் வழங்கிய ஆட்சி போல ஆட்சி செய்வார் என்றார். திமுகவினர் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள், ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை பாதி பேருக்கு மட்டும் தான் கொடுத்தார்கள் மீதி பேருக்கு தகுதி இல்லை என்று கூறுகிறார்கள், பெண்களுக்கு தகுதி இல்லை என்று கூறும் அந்த முதலமைச்சரை தகுதியில்லாத முதலமைச்சராக மாற்ற இந்த தேர்தல் வாய்ப்பாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்ப தலைவிக்கு 3000 ரூபாய் கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார். ஆறு கியாஸ் சிலிண்டர்கள் வருடத்திற்கு கொடுப்பதாக கூறியுள்ளார். இந்த தேர்தலில் தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கிங் மேக்கராக உருவாகி தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கும் பாடுபடுவார் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஸ் ரெட்டி ரவிக்குமார், ஒன்றிய துணை செயலாளர் நவீன், கழக நிர்வாகி ஸ்ரீநாத்,ஓசூர் பகுதி கழக செயலாளர் செயலாளர்கள் அசோகர் ரெட்டி ,வாசுதேவன், மஞ்சு, ராஜு, ஓசூர் முன்னாள் நகர செயலாளர் நாராயணன், மாவட்டத் துணை செயலாளர் மதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண், புட்டா ரெட்டி, ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி,அண்ணா தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், விளக்கெண்ணெய் மாவட்ட செயலாளர்கள் இளஞ்சூரியன், ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் ரஜினி, லட்சுமி லக்ஷ்மி ஹேமகுமார் , கலாவதி சந்திரன், சிவராமன், வட்டக் கழக செயலாளர்கள் ஹரிபிரசாத்,சிவலிங்கம், ஹரி, பிரசாந்த்,கோபால ராமச்சந்திரன், பாபு ஆனந்த், கார்த்தி, குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,.