மதுராந்தகம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மதுராந்தகம் பகுதியில் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-15 06:34 GMT

மதுராந்தகம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பேடு, காட்டு தேவாத்தூர்,நீர் பெயர்,தொன்னாடு, முதுகரை,தேவத்தூர்,காவாத்தூர்,மாரிபுத்தூர், அருங்குணம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் அதிமுக வேட்பாளருக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்பொழுது காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் முதுகரை பகுதியில் பேசுகையில்,என்னை காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்த பின்பு பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவித்திருந்தேன் அந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 5000-க்கும் மேற்பட்ட குறைகள் புகாராக வந்துள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் அறிவித்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வரப்பட்ட புகார்கள் உடனடியாக தீர்க்கப்படும் என பொதுமக்களிடம் பேசினார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம்,மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News