விளவங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
நாகர்கோவிலை சேர்ந்த ராணி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்த லில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் தே.மு.தி.க., புதிய தமிழ கம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகி யவை இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க.வுக்கு 5 தொகு திகள், புதிய தமிழகம், எஸ். டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக் கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீத முள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதில்அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் இன்று புதன் கிழமை அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் தமிழகத்தில் போட்டியிடும் 16 வேட்பாளர்களும், புதுச்சேரி வேட்பாளரும் இடம் பெற்றிருந்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு நாகர்கோவில் சேர்ந்த ராணி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது அதிமுக கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார். தற்போது என்னை வேட்பாளராக அறிவித்துள்ள முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்னை பரிந்துரை செய்த எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆகியோருக்கும் நந்தியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.