எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் -மரக்கன்று வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினர்.;
Update: 2024-05-12 06:37 GMT
மரக்கன்று வழங்கல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மே 12) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை மார்க்கெட்டில் முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.