அதிமுக ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிமுக சார்பில் அரவக்குறிச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில், அரவக்குறிச்சி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பிலும், பள்ளபட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட அதிமுக கட்சியின் பூத் தலைவர்கள், செயலாளர்கள் தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான சின்னசாமி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், நாடாளுமன்ற தேர்தலின் போது, எவ்வாறு வியூகம் அமைத்து செயல்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை எம் ஆர் விஜயபாஸ்கர், பூத்கமிட்டி ஏஜெண்டுகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்கினார்.