அதிமுக எதற்கு போட்டியிடுகிறது என்று தெரியவில்லை - அமைச்சர்

அதிமுக தேர்தலில் எதற்கு போட்டியிடுகின்றது என்று தெரியவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

Update: 2024-04-13 05:45 GMT

அதிமுக தேர்தலில் எதற்கு போட்டியிடுகின்றது என்று தெரியவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.


சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டனூர், புதுவயல், சாக்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக இந்திய பிரதமராக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு கேடுகளை செய்த மோடியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும். நம்முடைய இந்தியா கூட்டணி சார்பில் ஒன்றியத்தில் நல்ல அரசு அமைய வேண்டும். மோடி அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் நமது தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு உரிமைகளை பறித்துள்ளார்கள். சென்ற தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல அதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியும் அவர் நிறைவேற்றாமல் இருக்கின்றார். தற்போது உள்ள பாரதிய ஜனதா கூட்டணி மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தேடித்தேடி ஒரு நபரை சென்னையில் இருந்து கொண்டு வந்து பாஜக இங்கே நிறுத்தி உள்ளார்கள். சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளரின் தலைமையில் இயங்கக்கூடிய நிதி நிறுவனம் ஒன்றில் 525 கோடி மோசடி நடந்திருப்பதாக பத்திரிக்கையில் செய்திகள் வெளிவந்துள்ளன. அகில இந்திய அளவில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி போட்டியிட்டு பிரதமர் யார் என தீர்மானிக்கும் போட்டியில் இறங்கி உள்ளன. ஆனால் அதிமுக எதற்காக போட்டியிடுகின்றது என்று தெரியவில்லை. அவர்களுக்கும் வேட்பாளர் கிடைக்காமல் ஒரு புதியவரை இங்கே நிறுத்தி உள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
Tags:    

Similar News