அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டம்
முதல்வர் முக ஸ்டாலினுக்கு மனசாட்சி இருந்தால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டமாக பேசியுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மனசாட்சி இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இனியும் திமுக அரசு தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி இன்றைக்கு தமிழகம் சுடுகாடாக மாறி இருக்கிற ஒரு அவல நிலையை நாம் பார்க்கிற பொழுது, நெஞ்சை உறைய வைக்கின்ற கள்ளச்சாராயம் உயிர்பலி நம் கண்களிலே கண்ணீரை வரவழைத்து வற்றிப் போய் விட்டது.தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ள இந்த கள்ளச்சாராயம் பலிக்கு எல்லோரும் கேட்கிற ஒரே கேள்வி இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கடந்த ஆண்டிலேயே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலே கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் பலியானார்கள், அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் உயிரிழந்தார்.
இந்த சோக சுவடு இந்த சோகத்தின் ஈரம் காய்ம் மறைவதற்குள்ளாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் 57 பேர் பலியாகி 156 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.நெஞ்சை உருக்கும் சம்பவத்தை பற்றி சட்டசபையில் விவாதிப்பதற்கு அனுமதி தாருங்கள் பேரவை தலைவரிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஜனநாயகத்தினுடைய உரிமையின் அடிப்படையிலே கடமையாற்றுவதற்கு கேள்வி எழுப்புகிறார் ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. . கள்ளச்சாராயத்திற்கு துணை போனவர்களை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த அரசு அவர்களை மயிலிறகால் தடவி கொடுத்து விட்டு இங்கே ஜனநாயகத்தின் குரல்வலையை நினைக்கின்ற வகையிலே ஹிட்லர் முசோலினி மறுவடிவமாக ஸ்டாலின் உள்ளார்.
களத்தில் முதல் நபராக நேரடியாக சென்று அந்த மக்களை சந்தித்து அவர் துயரங்களிலே பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்கிற அந்த நம்பிக்கை அடிப்படையிலேயே மக்கள் நலனில் மீதுள்ள அக்கறையின் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்துகிறார்கள் முதல் நாளில் இறந்த உறுப்பினர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அந்த நிலையிலே சபை ஒத்தி வைக்கப்படுகிறது யாரும் நாங்கள் அங்கே அந்த மரபை மீறாமல்,மறுநாள் எதிர்க்கட்சி தலைவர் அடுத்த நாள் நாம் முக்கிய விவாதமாக இதை விவாதிக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் எடப்பாடியார் கேட்கிறார்கள். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது காரணம் முதலமைச்சர் கொடுத்த அழுத்தம் தான் என்று வெட்டு வெளிச்சமாக தெரிகிறது.
பிறகு எந்த பிரச்சினையை விவாதிக்க முடியும் எங்களுக்கு கிடைத்த பரிசு குண்டுகட்டாக எங்களை தூக்கிச் சென்றது தான், சட்டசபையில் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிற இந்த ஆட்சி. அரசின் அலட்சியத்தாலே தமிழ்நாடு தற்போது சுடுகாடாக இருக்கிறது என்கிற செய்தி மக்களுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகவும் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டு மக்களுக்கு ஆறுதல் சொல்லவாவது முதல்வர் சென்று இருக்க வேண்டமா, இந்த செய்தி மக்களுக்கு சென்றடைய கூடாது என்பதற்காகவும், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது மக்களின் உயிரைப் பறித்து இருக்கிற சென்று விடும் என்பதற்காக தான் மறுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்தாண்டு இதேபோன்று செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலே 23 பேர்கள் கள்ளச்சராயத்தால் இறந்த பின்பு ஏதேனும் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா அப்படி எடுத்து இருந்தால் இந்த கள்ளக்குறிச்சியில் இந்த சோகம் நிகழ்ந்திருக்காது மூன்றாண்டு காலமாக கும்பகர்ண தூக்கத்தில் தூங்கி வழிந்து கொண்டிருக்கிற இந்த அரசு கடந்த ஆண்டு என்ன அறிக்கை கொடுத்தார்களோ அதே அறிக்கையினுடைய ஜெராக்ஸ் நகலாக தான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது இதனால் எந்த பலனும் மக்களுக்கு கிடைக்கவில்லை 18.2.2017 அன்று சட்டபேரவை தலைவராக தனபால் இருந்தார் திமுக எதிர்கட்சியாக இருந்த போது சட்டசபை தலைவர் சட்டையை கிழித்து, இருக்கை உடைத்து சட்டசபையில் இல்லாத வகையில் பல்வேறு அலங்கோலங்களை அரங்கேற்றினர் தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை இந்த சம்பவங்கள் எல்லாம் தற்போது இருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் தெரிய வாய்ப்பு இல்லை.
ஏனென்றால் அப்போது அவர் சட்டமன்றத்திற்கு உள்ளே இல்லை. சட்டமன்றத்தின் மறவை மீறுவது திமுகவிற்கு நிகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தான் அதுமட்டுமல்ல புரட்சித்தலைவி அம்மாமீது மானபங்கம் செய்தார்கள் புரட்சித்தலைவர் மீது காலணியை ஏறிந்தார்கள். கருணை உள்ளத்தோடு மனித நேயத்தோடு மக்களினுடைய துயர் துடைக்க வேண்டும் என்கிற அந்த தூய உள்ளத்தோடு எடப்பாடியார் எடுத்து வைக்கின்ற அந்த கோரிக்கைகளை, கருத்துக்களை கேட்பதற்கு கூட மனம் இல்லாத ஒரு இடிஅமீன் அரசாகத்தான் இந்த அரசு இருக்கிறது. ஆகவே இன்றைக்கு இன்னும் அதை சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்ற அந்த அப்பாவி மக்கள் பூரண நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு, உயிரிழந்திருக்கிற அப்பாவி மக்களுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்று அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டு, இனியும் இந்த அரசு தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். சிபிஐ விசாரணை உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இதை மறுக்கிற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை செவிமடுத்து கேட்பாரா முதல்வர். ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சொல்லவில்லை ஏனென்றால் அவருடைய மனசாட்சியை உறுத்துகிறது. கண் கெட்ட பிறகுசூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள் 57பேர் இறந்து போய் பிறகு அதிகாரிகளை மாற்றுகிறார்கள்.வயிற்று வலியாக இறந்து போனார்கள் என்று முட்டு கொடுக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை மாவட்ட ஆட்சித் தலைவர் காப்பாற்றுவதற்கு இடமாற்றம் செய்திருக்கிறார்.என கூறினார். கிராமத்தில் சொல்லுவார்கள் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் அதே போல் முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார்.