சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கிய அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.;
Update: 2024-05-22 01:42 GMT
சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கிய அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 12ஆம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை தொடர்ந்து நெல்லையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா ஏற்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் 70 நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று (மே 21) நடைபெற்ற 10வது நாள் கொண்டாட்டத்தில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட்களை அதிமுகவினர் பரிசாக வழங்கினர்.