அதிமுகவினர் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!

புதுக்கோட்டையில் அதிமுகவினர் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் .

Update: 2024-03-12 10:54 GMT

புதுக்கோட்டையில் அதிமுகவினர் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் .சி. விஜயபாஸ்கர் பங்கேற்பு. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறியுள்ளதை கண்டித்து மாவட்ட தலைநகர் புதுக்கோட்டை யில் , அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிகிறது.

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்று முன்தினம் கூட 111 கோடி ரூபாய் அளவிற்கு போதை பொருள் சிக்கியது புதுக்கோட்டை மாவட்டம் விடியா திமுக ஆட்சியில் கடத்தல் காரர்களின் மையமாக திகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணமான விடியா தி மு க அரசை கண்டித்து, தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர். சி. விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுகவினர் அண்ணா சிலை அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ.எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான், புதுக்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் ஆகியோரின் முன்னிலையில் நகர, ஒன்றிய, வட்டக் கழக செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News