அதிமுகவிடம் மக்களை கவர்வதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை: மாணிக்கம் தாகூர்
அதிமுகவிடம் மக்களை கவர்வதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என்பதை தேர்தல் அறிக்கை காண்பிக்கிறது என மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை வந்தடைந்தார். _இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்_ _விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து அடைந்துள்ளது குறித்த கேள்விக்கு.?_ விருதுநகர் தொகுதி என்றுமே நட்சத்திரத் தொகுதி தான், மற்ற கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்களிடம் ஆதரவ கேட்டு வரஇருக்கிறார்கள்., இந்த ஜனநாயகத்தின் நிகழ்வுகளில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
_திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் போல் அதிமுகவின் வாக்குறுதிகள் உள்ளது குறித்த கேள்விக்கு.?_ அதிமுகவிடம் மக்களை கவர்வதற்கு எந்த ஒரு திட்டமும் அவர்கள் கையில் இல்லை, மற்றவர்கள் அறிவித்த வாக்குறுதிகளை காப்பியடித்து அதிமுக அறிவித்துள்ளது. உண்மையில் யார் சொன்னதை செய்ய இருக்கிறார்களோ.? அவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
_அமலாக்கத்துறை தொடர்ந்து முதலமைச்சரை கைது செய்து வருகின்றார்கள் இது பாஜகவின் தேர்தல் காரணமாக நடந்துள்ள என எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்த கேள்விக்கு.?_ பாஜகவிற்கு பணியாத 2 முதலமைச்சர்களை மிரட்டுவதற்காக இந்த நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது., காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியின் கணக்குளை முடக்கி முதலமைச்சர்களை தேர்தலுக்கு முன்னால் கைது செய்கின்ற இப்படிபட்ட நிகழ்வுகள் இதுவரை இந்திய வரலாற்று நடந்ததில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த தேர்தலில் பாஜவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
_திமுக 2026 சட்டமன்ற தேர்தலில் பெட்ரோல் மற்றும் டீசல் இலவசமாக கொடுப்பார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு.?_ அண்ணாமலை அதானிக் அம்பானிக்கும் பணியாற்றுபவர் அவருக்கு தெரியாது சாமானியரின் பெட்ரோல் - டீசல் செலவு மாத வருமானத்தில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது. அண்ணாமலை பணக்காரர்களுக்கு பணியாற்றும் பணியாளர்.
விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளார்..? அதில் உங்களை வேட்பாளராக அறிவிப்பார்களா என்பது குறித்த கேள்விக்கு.?_ இந்தியா கூட்டணியின் விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை,
அதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் இந்தியா கூட்டணி பிரச்சாரம் இன்று தொடங்குகிறது அதற்கு உதவி செய்ய வருகை தந்துள்ளார் அதை நாங்கள் வரவேற்கிறோம். _கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் இது பற்றி உங்களுடைய கருத்து குறித்த கேள்விக்கு.?_ வீட்டு வாடகை கார் வாடகை என அனைத்துமே நண்பர்கள் சில பேர் செலவில் அண்ணாமலை வாழ்ந்து கொண்டிருக்கிறார், இந்த தேர்தல் செலவை அதானி மாதிரி நண்பர்கள் அண்ணாமலைக்கு கொடுப்பார்கள். அது அனைவருக்கும் அறிந்ததே இந்த நாடகம் தமிழ்நாட்டில் பலிக்காது, அண்ணாமலை உண்மையை சொல்லி என்று வாக்கு கேட்கிறாரோ அன்றுதான் வாக்கு வரும்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களிடம் என்ன சொல்லி வாக்கு கேட்கப் போகிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு.?இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் டோல்கேட் எடுக்கப்படும், மாற்றப்படும், இந்தியா கூட்டணி வந்தால் மட்டுமே விருதுநகர் தொகுதிக்கு வளர்ச்சி வரும், பெயரளவில் இருக்கும் எய்ம்ஸ் மற்றும் ஜவுளி பூங்கா மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி டெல்லியிலே வரவேண்டும்,
ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தான் மத்திய அரசால் கைவிடப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று மக்களுக்கு எடுத்துச் செல்வோம் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது என்றார்.