போதை பொருள் விற்பனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

செய்யாறில் அதிமுக சார்பில் போதை பொருள் விற்பனை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-04 06:13 GMT

கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் திமுக அரசின் அவல நிலையால் எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை சரளமாக நடைபெறுகிறது. இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் நகர கழக செயலாளர் வெங்கடேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் , கிளைக் கழக செயலாளர்கள் பிற அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News