திருப்பத்தூரில் அதிமுக சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம்

திருப்பத்தூரில் அதிமுக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது;

Update: 2024-01-26 12:46 GMT

திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் என அதிமுக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் அலப்பறை என ‌திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி சாடல் திருப்பத்துார் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மொழி போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் அப்போது மேடையில் அவர் பேசுகையில் இந்த புனிதமான மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் திமுக,அதிமுக மதிமுக ஆகிய வீர வணக்க பொதுக்கூட்டம் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

Advertisement

    அப்போது அதிமுகவினர் நடத்திய மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தியாகிகளின் திருநாளில் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் என பாடல் போட்டு கேட்டுள்ளனர் ஏனென்றால் அதிமுகவினருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என பேசினார்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பற்றி கவலை இல்லை 30 ஆண்டு காலம் எந்த கட்சியும் வெற்றி பெறமுடியாது இந்த வீர வணக்கம் நாள் யாருக்கு பொருந்ததோ இல்லையோ கலைஞருக்கு பொருந்தும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News