நாமக்கல்லில் அதிமுக மனித சங்கிலி போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
போதைப் பொருளுக்கு எதிராக நாமக்கல்லில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-12 11:02 GMT
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பழக்கம் அதிகளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கவர்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து தமிழகம் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராகா தமிழ்மணி தலைமையில் நாமக்கல் நேதாஜி சிலை அருகில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டம் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கடைவீதி பிரதான சாலை அதிமுகவினர் வரிசையாக நின்றிருந்தனர். மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு போதைப் பொருளுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசினை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினார்கள்.