தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
சங்ககிரி: தேவூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-12 10:02 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தலைமையில் திமுக அரசை கண்டித்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தேவூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டு போதை பொருளை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்ட துணைச் செயலாளர் வேலுமணி ,சங்ககிரி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ் , முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, தேவூர் பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணன், உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.