நாகர்கோவில் சங்கு ஊதி மௌன அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

ஒழுகினசேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சங்கு ஊதி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.;

Update: 2024-06-24 13:08 GMT

ஒழுகினசேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சங்கு ஊதி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.   கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அன்பு மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்க ப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் அதிமுகவினர் நாகர்கோவில் நகரில் ஓட்டுவதற்கு வைத்திருந்த சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.      

Advertisement

இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால்  அதிமுக நிர்வாகிகள் ஒழுகினசேரியில்  உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் குவிந்தனர். அங்கு நடந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சங்கு ஊதி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.   இதில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சை மால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News