எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 15:08 GMT
மரியாதை செய்த அதிமுகவினர்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக நகர் கழகம் சார்பில் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருஉருவச்சிலைக்கு நகரச் செயலாளர் ராஜா தலைமையில், மாவட்டக் செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டலஇணை செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர் அவைத்தலைவர் பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, ஸ்ரீ தர், கருணாகரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்