ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க அதிமுகவினர் நகராட்சி ஆணையரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க வேண்டும் என ராசிபுரம் நகர அதிமுக சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் அதிமுக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
ராசிபுரம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், அதிமுக ராசிபுரம் நகர கழக செயலாளருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் அதிமுக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சேகரிடம் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2012 ஆம் ஆண்டு ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டு பஸ் நிலையம் இருபுறமும் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் பேரில் 2013 ல் ராசிபுரம் நகர்மன்றத்தில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 2015 ல் ரூ.9.90 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர் பெயர் நினைவு வளைவு அமைக்க பணிகள் மேற்க்கொள்ள பிரகாசம் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது ராசிபுரம் நகர மன்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கருணாநிதி பெயர் வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் நகர பொருளாளர் எஸ்.வெங்கடாஜலம், அவைத்தலைவர் ஆர்.கோபால், மாவட்ட பிரதிநிதி ஆர்.பி.ஜெகன், நகரத் துணைச் செயலாளர் வாசுதேவன், வார்டு செயலாளர் ரமேஷ் அமுல்ராஜ், ஏ.பி.செல்வம், ஆயில் சீனிவாசன், நல்லுசாமி, சர்தார், ஆர்.பி.குமார், செல்லமுத்து, மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, சோலைராஜன், ஏ.கே.முருகேசன், மாது, குணசேகரன், ஆர்.எஸ்.பாஸ்கரன், பிரஸ் சரவணன், ஆறுமுகம், ஸ்ரீதர, நகரமன்ற உறுப்பினர் மகாலட்சுமி ,மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.