திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்

குடிநீர் வழங்காததை கண்டித்து திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-29 12:57 GMT

அதிமுகவினர் முற்றுகை

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு திருமங்கலம் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்த நிலையில் உரிய பதில் அளிக்காததால் ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 27 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் 27 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக வைகை கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி இன்று அதிமுக நகர செயலாளர் விஜயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆணையாளர் அசோக் குமாரிடம் புகார் அளித்தனர்.குடிநீர் முறையாக வழங்கப்படாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் எனவே தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் .

மேலும் பல்வேறு இடங்களில் தெருவிளக்கு வசதி இல்லாமலும் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஆணையாளர் அசோக் குமார் இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காததால் அதிமுகவினர் ஆணையாளரை முற்றுகையிட்டு அவரது அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதையடுத்து இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக நகராட்சி ஆணையாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவம் நகராட்சி அலுவலகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நகர செயலாளர் விஜயன் மக்களிடம் வரி வசூல் செய்வதில் மட்டும் அக்கறை காட்டும் நகராட்சி நிர்வாகம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முறையாக தண்ணீர் வரி செலுத்தாததால் தற்போது தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது எனவும்,

மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் எந்த பதிலும் .அளிக்காமல் மௌனம் காத்து வருவதாகவும்குற்றம் சாட்டிய நகரச் செயலாளர் விஜயன் இதே போல் தெருவிளக்கு வசதி, சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளும் முறையாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் நகராட்சி எரிவாயு தகனமேடையில் இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கு ஏழாயிரம் ரூபாய்வரை வசூலிப்பதாகவும் அதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதாக குற்றம் சாட்டினார். பேட்டி: ஜே டி விஜயன் அதிமுக நகர செயலாளர்

Tags:    

Similar News