முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-06-25 02:57 GMT

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ. 10 லட்சம்,நாட்டை காக்ககும் ராணுவீரர் வீரமரணமடைந்தால் ரூ5 லட்சம் பட்டாசு விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் என்பது எந்தவிதத்தில் நியாயம் -விருதுநகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகரில் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் பதவிவிலக வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி,தமிழ்நாட்டில் திமுக பதவி ஏற்ற கடந்த 3 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் அருந்தி 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்றும் கடந்த 2023 ஆம் ஆண்டில் விழுப்புரம், மரக்காணம் , செங்கல்பட்டில், கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்றும் இந்த சம்பவம் நடந்து ஓராண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இந்த வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் பலியாகி உள்ளனர் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கல்வராயன் மலை கள்ளச்சாராய மலையாக மாறியுள்ளது என்றார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் மேலும்இந்த சம்பவத்திற்கு தமிழக அமைச்சர் மு .க . ஸ்டாலின் பொறுப்பேற்று உடனடியாக பதவியை விலக வேண்டும் என்றும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ. 10 லட்சம்,நாட்டை காக்ககும் ராணுவீரர் வீரமரணமடைந்தால் ரூ5 லட்சம் பட்டாசு விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் என்பது எந்தவிதத்தில் நியாயம் என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News