கடலூரில் அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூரில் ஆளும்கட்சியை எதிர்த்து அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-04 13:34 GMT
கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்காத திமுக அரசை கண்டித்து, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், சொரத்தூர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.