அதிமுக அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
. ஒ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்ததை கொண்டாடிய அதிமுகவினர்.
Update: 2024-01-20 11:27 GMT
திண்டுக்கலில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடத்தினர். ஒ.பன்னீர்செல்வத்தின் மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக வெடி, வெடித்து. இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம் நடத்தினர். இது முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், நகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன், நகர கூட்டுறவு தலைவர் பிரேம்குமார், அதிமுக முக்கிய நிர்வாகி நெப்போலியன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா உட்பட பலர் பங்கேற்றனர்.