போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்!
பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.
Update: 2024-03-14 06:21 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போதைப் பொருள் கடத்தலில் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுணிவை ஏற்படுத்தியதிற்கு திமுக அரசே காரணம் என திமுக அரசை கண்டித்து போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு பகுதியாக பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நகர செயலாளர் முன்னிலை வகித்து புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் போதைப் பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் காசி கண்ணப்பன் ,முருகேசன், சரவணன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.