பூஞ்சோலை சென்ற அகரம் முத்தாலம்மன்
அகரம் முத்தாலம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு சென்றார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-25 05:27 GMT
அகரம் முத்தாலம்மன்
தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா கண்திறப்பு நிகழ்வுடன் நேற்று முன்தினம் துவங்கியது. அதன் பிறகு அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள கொலு மண்டபத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். நேற்று மதியம் 1:30 மணிக்கு மேல் அம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு சென்றார். அப்போது தாடிக்கொம்பு அருணா சேம்பர் நிறுவனத்தின் சார்பில் வாண வேடிக்கை நடந்தது. அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, அகரம் பேரூர் அ.தி.மு.க.,துணை செயலாளர் முருகேசன்,லட்சுமணன் மளிகை ஸ்டோர் மூர்த்தி,ஏ.எஸ்.ஆர்., ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஐயப்பன், சுக்காம்பட்டி தொழிலதிபர் சந்திரமவுலி பங்கேற்றனர்.