சுவாமிதோப்பில் அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா.
சுவாமிதோப்பில் அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கடந்த 31 ஆண்டுகளாக அய்யா வைகுண்ட சுவாமியின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா கார்த்திகை மாதம் 27ஆம் தேதி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான விழா டிசம்பர் 13ஆம் தேதி காலை நடைபெற்றது. விழாவுக்கு அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகளும், அய்யாவழி ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பணிவிடைகளும் நடைபெற்றது. தொடர்ந்து அய்யா வழியின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பவர்களுக்கும் பாராயணம் செய்பவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி, சேனாபள்ளி கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சாக்ரடீஸ் ,சினிமா தயாரிப்பாளர் பி .ற்றி .செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஏடு வாசிப்பாளர்களுக்கு பாராட்டு பட்டம் வழங்கினார்கள்.