அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்
மேல்மலையனூர் அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.;
மேல்மலையனூர் அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதே நேரத்தில் கோவில் அன்னதான கூடத்தில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குத்து விளக்கேற்றி புதுமண தம்பதிகளுக்கு அன்னதானம் வழங்கி திட்டத்தை செயல்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.