அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்க கூட்டம் 

கன்னியாகுமரியில் நடந்த அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-06-10 08:04 GMT

ஆலோசனை கூட்டம்

அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின்  ஆலோசனை கூட்டம்  நிறுவனர், தலைவருமான சகாயம் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 43-கடலோர மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் உயிரை பாதுகாத்திடவும், மருத்துவ வசதி வழங்கிடவும் கடல் ஆம்புலன்ஸ்  திட்டம் குமரியில் கொண்டு வர மத்திய அரசை நாடுவது எனவும்., மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் 𝗣𝗠𝗠𝗦𝗬-திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், ரூபாய் 2 லட்சம் மானியத்துடன் வழங்கப்படும் வள்ளங்கள் மீனவர்களுக்கு பெற்று கொடுப்பது குறித்தும்., குமரி கடலோர மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்கும் தளம் அமைக்க கோரியும்.,     குமரி உள்நாட்டு மீனவ மக்களின் 50 ஆண்டுகால வாழ்வாதாரமான தோவாளை தாலுகா, அகஸ்தீஸ்வரம் தாலுகா, மற்றும் கல்குளம் தாலுகா பொதுப்பணித்துறை குளங்களின் மீன் பாசி குத்தகை உரிமத்தினை  உடனடியாக உள்நாட்டு மீனவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோருதல் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News