நாமக்கல் ATC டெப்போவில் சிமெண்ட் தரை அமைக்க நிதி ஒதுக்கீடு

நாமக்கல் ATC டெப்போவில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தரை தளம் அமைக்க, நாமக்கல் எம்பி சின்ராஜ் நிதி ஒதுக்கீடு அளித்தார்.

Update: 2024-03-11 11:53 GMT

நாமக்கல் ATC டெப்போவில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தரை தளம் அமைக்க, நாமக்கல் எம்பி சின்ராஜ் நிதி ஒதுக்கீடு அளித்தார்.


நாமக்கல் நகரில், பரமத்தி ரோட்டில் சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக டெப்போ அமைந்துள்ளது. இந்த டெப்போவிற்கு, நாமக்கல் பார்லிமெண்ட் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தரை தளம் அமைக்க, நாமக்கல் எம்.பி. சின்ராஜ் நிதி ஒதுக்கீடு அளித்தார். தரை தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய தரைத்தள வசதி துவக்க விழா அரசு போக்குவரத்து கழக டெப்போவில் நடைபெற்றது. நாமக்கல் லோக்சபா எம்.பி. சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

கொங்குநாடு மககள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தரைத்தள கல்வெட்டினைத் திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், அரசு போக்குரவத்து கழக நாமக்கல் கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு, கிளை மேலாளர்கள் மகேஷ்வரன், துரைசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டல தீரன் தொழிற்சங்க பேரவை மண்டல தலைவர் செல்வகுமார், மண்டல செயலாளர் கோபிநாத், மண்டல துணை செயலாளர்கள் கண்ணையன், சதீஷ்குமார், கிளை செயலாளர்கள் செல்லையா, சுரேஷ், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News