திண்டுக்கல்லில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்

திண்டுக்கல்லில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2024-01-22 16:22 GMT

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்

திண்டுக்கல்லில் அணிவகுத்துச் செல்லும் பழனி பாதையாத்திரை பக்தர்களுக்கு மாநகராட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நம்பர் ஒன் கோயிலாக விளங்குவது பழனி கோவில் ஆகும். இங்கு வரும் 25ஆம் தேதி தைப்பூசம் நடக்கிறது.

இதற்காக ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு நடந்து செல்கின்றனர். பழநிக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் உணவு மற்றும் குடிநீர் பழங்கள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆங்காங்கே மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News