பாரதிய ஜனதாவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சியினர் அவர்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-02-07 02:02 GMT
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாற்றுக் கட்சியினை சேர்ந்தவர்கள் இன்று பாரதிய ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்.ஜெயவேல் முருகன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மாராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர் முத்துராமன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
அமமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருணாகரன் மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா, அமமுக 47-ம் வார்டு வட்ட செயலாளர் பாஸ்கர், 49 வார்டு முன்னால் திமுக வட்ட செயலாளர் ஜயப்பன், முருகன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினரும் பாஜகவில் இணைந்தனர்.