திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்த மாற்றுகாட்சியினர்

திருப்பூர் காங்கேயம் சாலை சி டி சி கார்னர் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில செயலாளர் ஜாபர்அலி முன்னிலையில் இணைந்து கொண்டனர்.

Update: 2024-01-13 09:27 GMT

மாநில செயலாளர்

திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில செயலாளர் ஜாபர் அலி முன்னிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட செயலாளராக ராயல் ராஜா என்பவர் நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி இன்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிமுன் அன்சாரியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து இருப்பதாகவும் , வருகின்ற 28ஆம் தேதி பழனி பாபா நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மனித நேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொள்ள இருப்பதாகவும்,

அவ்விழா ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கும் விழாவாக அமையும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி திருச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும் , தமிழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கிணற்றில் போட்ட கல் போல நிறைவேற்றாமல் இருப்பதாகவும் , உடனடியாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் குரலாய் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்துகின்ற இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக பேட்டி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைபாடுகள் குறித்து கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சரியான நேரத்தில் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News