ஆசிரியர்களை குதிரை வண்டியில் அழைத்து வந்து அசத்திய மாணவர்கள்
திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போது முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை குதிரை வண்டியில் அழைத்து வந்தனர்.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டு கால முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பு முன்னாள் மாணவர் சங்கம் மூலம் நிகழ்த்தப்பட்டது. இதற்கு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி ரிக்டார் மரிவளவன், பள்ளி தாளாளர் அருள் தாஸ், தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், முன்னாள் மாணவர் சங்க மூத்த உறுப்பினர் எஸ்.கே.சி.குப்புசாமி, கால்பந்து கழக மாவட்ட செயலாளர் சண்முகம், நிரந்தர உறுப்பினர் பாலசுந்தரம், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் வீரமணி, சிறப்பு விருந்தினராக இமானுவேல் டி ஜீசஸ் அஸ்தா, கே .எம் .சி . முன்னாள் முதல்வர் செல்வராஜ், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்தியா முன்னாள் பொது மேலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் முன்னாள் ஆசிரியர்களை மாணவர்கள் குதிரை வண்டி , சைக்கிள் ரிக்க்ஷா ஆட்டோ ஆகியவற்றில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் இந்தாண்டு ஓய்வு பெற உள்ள அறிவியல் ஆசிரியர்கள் ஜான் கென்னடி, ஆனந்த் உட்பட பல ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த சந்தோசமான சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். குதிரை வண்டி அனுபவம் குறித்து ஆசிரியர் குயிலின் கூறியதாவது: பழைய மாணவர்கள் எங்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டனர். இன்னும் அன்பு, மரியாதையும் குறையாமல் எங்களை குதிரை வண்டி, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா அழைத்து வந்தனர். நாங்கள் ஓய்வு பெற்ற பின்பும் எங்களுக்கு கொடுத்த மரியாதையை எண்ணி பெருமைப்படுகிறோம். அந்த நாள் நினைவுகள் எங்கள் நெஞ்சிலே வந்தது. நாங்கள் அடித்ததையும், பாராட்டி மாணவர்கள் நினைத்து பேசியது எங்கள் கண்களை குளமாக்கியது. மனதை குணமாக்கியது, என்றார்.