அனந்தபுரத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அனந்தபுரத்தில் 2009 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-06-18 06:37 GMT
அனந்தபுரத்தில் 2009 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 2009ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் 14 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் தலைமை ஆசிரியர் முனியபிள்ளை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார்.இதில், தலைமை ஆசிரியர் நந்தகோபாலன், ஆசிரியர்கள் பாலு, கிருஷ்ணமூர்த்தி, யூஜீஸ் சார்லஸ், இரணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னாள் மாணவர்கள் 60 பேர் தங்களின் குடும்பங்களோடு சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இவர்கள் தாங்கள் பயின்ற வகுப்புகளை, தங்களின் குடும்பத்தாருக்கு காண்பித்ததோடு, ஒருவருக்கு, ஒருவர் தங்களின் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக, முன்னாள் மாணவர்கள், கல்வி போதித்த ஆசிரியர்களோடு குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.