மூங்கில்துறைபட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மூங்கில்துறைபட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 10:43 GMT
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 97- 98ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் மாணவன் ஜெயபால் வரவேற்றார். ஆசிரியர்கள் பாலாம்மாள், திருஞானசம்பந்தம்,
ஜெயபால், இமானுவேல், கணபதி, குமரகுரு, ஆரோக்கிய மேரி, ஏழுமலை உள்ளிட்டோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.