முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - 27 ஆண்டுகளுக்குப் பின் நெகிழ்ச்சி

Update: 2023-11-22 09:23 GMT

முன்னாள் மாணவர் சந்திப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செய்யாறு அரசு கல்லூரியில் முன்னாள் வேதியல் துறை மாணவர்கள் சந்திப்புக்கான விழா நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1993- 1996 ஆண்டுகளில் வேதியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 27 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். வேதியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர் .நிகழ்வில் 40 முன்னாள் மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் வேதியல் துறைக்கு கணினி மற்றும் மரக்கன்றுகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முடிவில் இணை பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News