மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு - மக்களிடம் கருத்து கேட்க கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியோடு சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைப்பது குறித்து, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

Update: 2024-05-08 06:27 GMT

தூத்துக்குடி மாநகராட்சி 

நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி.ராஜா  வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தும்போது தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள வீடுகள் அதிகம் கொண்ட ஊராட்சிகள் மாநகராட்சியோடு சோ்க்கப்பட்டன. இருப்பினும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, கழிவுநீா் கால்வாய், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் உள்ளன. 

இந்த சூழ்நிலையில் மேலும் சில கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்பு சொத்துவரி, கட்டடவரி, காலிமனைவரி போன்றவற்றை மக்களால் எளிதில் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் காலிமனைகளை வாங்க, விற்க முற்படும்போது பத்திரப்பதிவின் புதிய நடைமுறை சிக்கல்களால் எளிதாக பத்திரம் பதிவு செய்ய முடியவில்லை.  எனவே, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கவுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன்பின்னா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News