அமாவாசை சிறப்பு பூஜை

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-06-06 13:17 GMT

சிறப்பு பூஜை 

பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் வைகாசி மாத அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும்,  மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பாண்டமங்கலம்‌ அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன்,  பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ பகவதி அம்மன்,  கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன் மற்றும் பரமத்தி அங்காளம்மன், பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் எழுந்தருளியுள்ள ஏரி கருப்பண்ணசாமி மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குல தெய்வ கோவில்களில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு  சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,  சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News