அமாவாசை சிறப்பு பூஜை
சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.;
Update: 2024-01-11 05:46 GMT
சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி அதிகாலை முதலே அருள்மிகு பெரியநாயகி உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகளுக்கு அதிகாலை முதலே பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம், குங்குமம், திருநீர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சோழீஸ்வரர் பெரியநாயகி சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.