கோவில்பட்டியில் கதை சொல்லி அசத்திய குழந்தைகள் !!
கோவில்பட்டியில் சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் குழந்தைகளின் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தின் 2ம் நாள் நிகழ்வாக குழந்தைகளின் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு பள்ளிகளின் சார்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கதை சொல்லி அசத்தினர்.
அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன்,நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் சங்கர் ராமின் வால்கோமாளி நிகழ்ச்சி நடந்தது. சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி மணிமொழிநங்கை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.