56 நிமிடத்தில் 603 யோகாசன ஆசனங்களை செய்து அசத்திய நபர்

56 நிமிடத்தில் 603 யோகாசன ஆசனங்களை செய்து அசத்திய தேனியை சேர்ந்த 64 வயது நபர்

Update: 2024-03-15 11:57 GMT

தேனி மாவட்டத்தை சேர்ந்த 64 வயதான நாகேஷ் என்பவர் தனது பணி ஓய்வு முடிந்தபின் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் முயற்சியில் யோகா செய்து பின் அதில் ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து யோகா செய்து வந்தார்.  யோகாசனத்தில் உள்ள பல்வேறு வகையான ஆசனங்களை கற்றுக்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார். 

இந்நிலையில் தான் கற்றுக்கொண்டு யோகாசன பயிற்சிகளை உலக சாதனை முயற்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் 603 யோகாசனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் இதற்காக நோவா புக் ஆப் உலக சாதனை என்ற அமைப்பின் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற யோகாசனம் செய்தார்.

56 நிமிடத்தில் 603 வகையான யோகா ஆசனங்களை செய்து காண்பித்து நோவா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பில் இவரது முயற்சி சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.  பணி ஓய்வு காலத்தை வீட்டில் இருந்தபடியே வீணாக்காமல் 64 வயதிலும் யோகாசனத்தை கற்றுக்கொண்டு அதனை உலக சாதனையாக மாற்றிய நாகேஷின் செயல் இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.  பின்னர் யோகாசனத்தில் உலக சாதனை செய்த நாகேஷிற்கு நோவா புக் ஆப் உலக சாதனை அமைப்பின் சார்பில் சாதனைக்கான சான்றிதழ்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News