அம்பேத்கர் பிறந்த நாள்: பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

ஊத்தகரையில் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Update: 2024-04-15 09:48 GMT

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ள அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை ஒட்டி அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைகள் செலுத்தினர்.

ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போன்று எஸ்சி எஸ்டி அமைப்பினர், திமுக,திக,விசிக, இந்திய குடியரசு கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்கள் ஏராளமான நபர்கள் பங்கேற்று பிறந்தநாள் விழா கொண்டாடினர்

Tags:    

Similar News