பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா

நத்தம் மாரியம்மன் கோவிலில் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலாவந்து அருள்பாலித்தார்.

Update: 2024-03-01 12:57 GMT

 நத்தம் மாரியம்மன் கோவிலில் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலாவந்து அருள்பாலித்தார்.  

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூப்பல்லாக்கு அம்மன் நகர் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தென் தமிழகத்தில் சிறப்பு பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இது அம்மன் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தினமும் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீச்சட்டி எடுத்தாலும், தீக்குளி இறங்குதல் சிறப்பு பெற்றதாக இருந்தது. முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்களை எடுத்து பக்தர்கள் தினமும் வலம் வந்தனர்.இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பூதேரில் அம்மன் வலம் வரும் நிகழ்வு நடந்தது.நத்தம் மாரியம்மன் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்தார். இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News